
கி.அ.தில்லைதாசன்
நேற்று நடந்த....
தெரு இது
இன்றும்.....
நடக்கிறேன்
நேற்றின் தெருவாய்
இன்று இது இல்லை
எடுத்து வைத்த
ஒவ்வொரு அடியிலும்
காப்பு இருந்தது
இரவு பகலாய்
எங்கும் பயணம்...
நிம்மதி.
இந்த நிலை மாறிப் போக.....
இத் தெருவெங்கும்
நடைபயில
பயமெனக்கு
முள் விதைத்த
வீதி இது
மலர்வின்றிக் கிடக்கின்றது
என்ற போதும்...
இந்தப் பயங்கள்
தீருமென்ற...
நம்பிக்கையோடு
என் பயணம்
தொடர்கிறது....................